கிட்டு இயக்கத்தில் உருவான மாவீரன் பிரபாகரனின் மேதகு

கிட்டு இயக்கத்தில் உருவான மாவீரன் பிரபாகரனின் மேதகு

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான  மாவீரன் பிரபாகரனின்  ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படம் உலகத்தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகின்றார் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

இப்படத்தின்  கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி. கிட்டு. ஒளிப்பதிவை ரியாஸ் மேற்கொள்ள, பிரவீன் குமார் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்வையிட்ட நடிகர்கள்  சத்யராஜ், ராஜேஷ், இயக்குனர்கள்  பொன்வண்ணன்,  சேரன்,  அமீர், மாரி செல்வராஜ்,  கவுதமன், நவீன் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.