மீண்டும் குட்டி பவானியா... திகில் படத்தில் ஹீரோவாகிறார் மகேந்திரன்

மீண்டும் குட்டி பவானியா... திகில் படத்தில் ஹீரோவாகிறார் மகேந்திரன்

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் தான் நடிகர் மகேந்திரன். 

இவர் கடைசியாக மாஸ்டர் படத்தில் குட்டி பவானி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிகாட்டியிருப்பார். அதன்பின்பு தற்போது தமிழ், தெலுங்கு போன்றவற்றின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் சிதம்பரம் ரயில்வே கேட் மற்றும் நம்ம ஊருக்கு என்ன ஆச்சு, அர்த்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அர்த்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  
எனவே அர்த்தம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி நடிகர் மகேந்திரன் மற்றும் ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

காதல் மற்றும் திகில் நிறைந்த படம்தான் அர்த்தம். மகேந்திரன், தற்போது முதல் முதலாக திகில் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது பெரும் மன நிறைவைத் தருவதாக மகேந்திரன் கூறினார்.