’இயக்குனரின் கதை’ என்ற தலைப்பில் வெளியான ’விக்ரம்’ மாஸ் புரொமோ..!

’விக்ரம்’ படத்தில் இருந்து வெளியான மாஸ் புரொமோ வீடியோ..!

’இயக்குனரின் கதை’ என்ற தலைப்பில் வெளியான ’விக்ரம்’ மாஸ் புரொமோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜீன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக ரிலீசாகவுள்ள இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால் அதன் புரொமோஷனுக்காக நடிகர் கமல் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்திருப்பதால் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. அந்த ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களுக்கு கூடுதல் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ’இயக்குனரின் கதை’ என்ற டைட்டிலில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

வெறும் 45 விநாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்த காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கிய விதம் குறித்த காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பார்க்கும் போது உடனடியாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு வருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.