வெளியானது, அமைதியான கலக்கம் நிரைந்த ‘மறக்குமா நெஞ்சம்’!

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது. அழகான இந்த பாடல், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெளியானது, அமைதியான கலக்கம் நிரைந்த ‘மறக்குமா நெஞ்சம்’!

பல ஆண்டுகளுக்கு பிறகு, காதல் படங்களுக்கான இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் காதல் நடிகரான சிலம்பரசன் இணைந்த புதிய படம் தான் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உர்வாகி இருக்கும் இந்த படமானது, வருகிற செப்டம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

ஐசரி கணேஷ்-இன் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி மற்றும், மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் ராதிக உட்பட பலர் நடித்துள்ளனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என்ற படங்களுக்கு அடுத்து இவர்களது இந்த படத்திற்காக, பல கோடி ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கும் நிலையில், படத்திற்கான பல அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.

படத்தின் ட்ரெயிலரும், முதல் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி பலரது வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாவது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான இந்த பாடல், மிகவும் அழகான ஒரு சிறிய சோகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த பாடல்.

தாமரை வரிகளில், 80-90களின் வாசம் வீசும் இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ பாடலில், கேசட்டுகள், போட்டோ ப்ரேம்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மூலம், ஊரை விட்டு ஊர் வந்து, காண்ட்ராக்க்ட் வர்க்கர்களாக வேலை செய்பவர்கள் பற்றிய கதை தான் இது என்பது போல தெரிகிறது. இந்த பாடல், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.