பல வருட தவம்... திரைக்கு வரப்போகும் "கே.ஜி.எஃப் சாப்டர் 2"... அல்டிமேட் அப்டேட்!!

கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் முக்கிய அப்டேடை படக்குழு அறிவித்துள்ளதால் ரசிர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.

பல வருட தவம்... திரைக்கு வரப்போகும் "கே.ஜி.எஃப் சாப்டர் 2"... அல்டிமேட் அப்டேட்!!

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா என பல நடிர்கள் நடித்துள்ளனர். இப்படம் உலக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாக போகிறது என ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

அதன் படி, கடந்த ஆண்டு ஜனவரியில் கே.ஜி.எஃப் சாப்டர் 2, ஜூலை 16ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டன, இதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் கே.ஜி.எஃப் சாப்டர் 2, ஏப்ரல் 14 அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் டீசர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்ற அல்டிமேட்டான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் மெர்சால் காட்டிய யாஷ்.. இரண்டாம் பாகத்தில் அதை ட்ரிபிள் மடங்காக காட்டுவார் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றார்.