’தளபதி 68’ படத்தின் கதையை டுவிட் மூலம் சொன்ன அட்லீ..! வியப்பில் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68வது திரைப்படத்தின் கதை குறித்த தகவலை இயக்குனர் அட்லீ தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் பலரும் வியப்படைந்துள்ளனர்.

’தளபதி 68’ படத்தின் கதையை டுவிட் மூலம் சொன்ன அட்லீ..! வியப்பில் ரசிகர்கள்

பிரபல இயக்குனரான அட்லீ ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். அதிலும் இவர் இயக்கிய ‘பிகில்’ திரைப்படத்தில் ராயப்பன் கேரக்டர் மிகப் பெரிய அளவில் ரீச்சானது.

என்னதான் இந்தப்படத்தில் ராயப்பன் கேரக்டர் கொஞ்ச நேரம் வந்தாலும் நடிகர் விஜய்க்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்றே சொல்லலாம். இந்நிலையில் அமேசான் பிரைம் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியது. அதாவது ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பனின் முழு கதையும் சொல்லலாமே..? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த அட்லீ, “செஞ்சிட்டா போச்சு” என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே நடிகர் விஜய்யின் 68 வது திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் கதை ‘பிகில்’ திரைப்படத்தின் முந்தைய பாகமாக இருக்கலாம் என்றும், அதில் ராயப்பனின் இளவயது சம்பவங்கள் இடம்பெறலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது. இப்படி ‘தளபதி 68’ படம் குறித்த தகவல் ஒவ்வொன்றாக வெளியாகும் இந்நேரத்தில் அட்லீயின் “செஞ்சிட்டா போச்சு” என்ற டுவிட் ரசிகர்களிடையே அப்போ கதை இதுதானா என்று யூகத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் தற்போது நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் பிஸியாக நடித்து வருவதாலும், அதேபோல் அட்லீயும் ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருவதால் இந்த படத்தை முடித்த பின்னர் தான் ’தளபதி 68’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.