இறுதி சடங்குகளுடன் நடிகர் மனோபாலாவின் உடல் தகனம்...!

இறுதி சடங்குகளுடன் நடிகர் மனோபாலாவின் உடல் தகனம்...!

மறைந்த இயக்குநர் மற்றும் நடிகருமான மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், ஏராளமான திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா? - அன்புமணி கேள்வி!

இதனைத் தொடர்ந்து, இவரது உடல் வடபழனி, விருகம்பாக்கம் வழியாக, வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில், குடும்பத்தினர், உறவினர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். பின்னர், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில், அவரது குடும்ப வழக்கப்படி, அவரது மகன் ஹரீஷ், இறுதி சடங்குகளை செய்தார். இதையடுத்து மனோபாலாவின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப் பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.