ஒவ்வொரு நாளும் எங்களை சிரிக்க வைத்தவர் மனோபாலா...! இயக்குநர் சேரன்...!

ஒவ்வொரு நாளும் எங்களை சிரிக்க வைத்தவர் மனோபாலா...! இயக்குநர் சேரன்...!

ஒவ்வொரு நாளும் எங்களை சிரிக்க வைத்தவர் மனோபாலா என இயக்குநர் சேரன் இயக்குநர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் திரை உலகில்  இயக்குநர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என பன்முகக் கலைஞராக தனக்கென ஒரு தனி அடையாளத்தையே ஏற்படுத்திக் கொண்டவர் மனோபாலா. கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் இயற்கை எய்தினார். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இன்று இயக்குநர் சேரன் அஞ்சலி  செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மனோபாலா பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது,"அனைவரையும் சிரிக்க வைத்த நபர் மனோபாலா. எங்களுடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் எங்களை சிரிக்க வைத்தார். அவரது இறப்பு என்பது பொய்யா? உண்மையா? என்று நினைக்க கூட முடியவில்லை. அனைவர் மீதும் அன்பு காட்டக்கூடியவர். என்னை அவர் மாப்பிள்ளை என்றும், நான் அவரை மாமா எனவும் கூப்பிடுவோம். அவர் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். "நம்முடைய குரல் யாருடைய வாழ்க்கையாவது மாற்ற வேண்டும்" என அனைத்து இடங்களிலும் குரல் கொடுத்துள்ளார்" என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.