மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து கணவனின் உடலை தூக்கிச் சுமந்த மந்திரா பேடி

மூடநம்பிக்கைகளை உடைத்தெரியும் விதமாக கணவர் மீது கொண்ட அதீத காதல் காரணமாக நடிகை மந்திரா பேடி யாரும் செய்யாத காரியத்தை செய்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து கணவனின் உடலை தூக்கிச் சுமந்த மந்திரா பேடி

இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார். பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனையடுத்து பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை மந்திரா பேடிக்கு ஆறுதல் கூறினர். சில பாலிவுட் பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

பெண்கள் பொதுவாகவே இறுதி ஊர்வலத்தில் கணவரின் உடலை சுமக்க மாட்டார்கள். ஆனால், காதல் கணவர் ராஜ் கெளஷலின் மறைவால் மிகவும் மனம் உடைந்த நடிகை மந்திரா பேடி மூடநம்பிக்கைகளை ஒதுக்கி வைத்து கணவரின் உடலை முன் நின்று தூக்கிச் சுமந்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் அழ்த்தி உள்ளது.