சர்ப்ரைஸ் விசிட் அடித்த மம்மு.. வாட் அ சர்ப்ரைஸ் நெகிழ்ந்த லால்..! வைரலான புகைப்படம்..!

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை..!

சர்ப்ரைஸ் விசிட் அடித்த மம்மு.. வாட் அ சர்ப்ரைஸ் நெகிழ்ந்த லால்..! வைரலான புகைப்படம்..!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லாலின் பிரம்மாண்ட வீட்டிற்கு மம்முட்டி சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். 

மம்முட்டி &  மோகன்லால்: தமிழ் சினிமாவில் எப்படி எம்.ஜி.ஆர், சிவாஜியோ? எப்படி ரஜினி, கமலோ? அப்படித்தான் மலையால சினிமாவில் மம்முட்டியும், மோகன்லாலும். தமிழிலும் ஆங்காங்கே இவர்கள் படங்கள் நடித்திருப்பதால் இங்கேயும் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. என்ன தான் திரையில் இருவரும் போட்டி போட்டாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அறிந்த விஷயம் தான். 

மோகன்லாலின் புதிய வீடு: மோகன்லால் கொச்சியில் உள்ள குந்தனூரில் தனது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மற்றும் 16-வது அடுக்கு மாடிகளை வாங்கி, புதிதாக புணரமைத்து சமீபத்தில் அங்கு கிரகப்பிரவேசம் செய்து குடியேறியுள்ளார். இந்த வீடியோவை இணையத்திலும் பதிவு செய்திருந்தார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 

சர்ப்ரைஸ் விசிட்: இந்த நிலையில், மோகன்லாலின் புதிய வீட்டிற்கு சர்ப்ரைஸாக விசிட் அடித்துள்ளார் மம்முட்டி. கிரகப்பிரவேஷத்துக்கு செல்ல முடியாத மம்முட்டி, அதன் பிறகு அவரது புதிய இல்லத்திற்கு சென்று தனது அன்பினை பரிமாறியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளார் மம்முட்டி. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.