சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட எம்.பி. இளையராஜா..! என்ன காரணம்?

சீரற்ற வானிலையால் விமான நிலையத்தில் சிக்கிய மக்கள்..!

சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட எம்.பி. இளையராஜா..! என்ன காரணம்?

வெளுத்து வாங்கிய மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு, ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. 

ஓடுதளங்களில் தேங்கிய தண்ணீர்: குறிப்பாக சென்னை விமானநிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்திலும் கடுமையான மழை பெய்ததால், விமான ஓடுதளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் சென்னை வர வேண்டிய விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 

விமான நிலையத்தில் இளையராஜா: அதேபோல சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் பலவும், ஓடு தளங்களிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பலரும் விமான நிலையங்களிலேயே பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். அப்படி, இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜாவும் சுமார் 7 மணி நேரம் விமான நிலையத்திற்குள் சிக்கிக் கொண்டார். 

7மணி நேர காத்திருப்பு: ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக செல்ல வேண்டிய அவர், விஐபி பகுதியில் காத்திருந்தார். அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனதால், சுமார் 7 மணி நேரம் அவர் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டார். அதன் பிறகு வானிலை சரியானதால் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். 

இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்..வெளுத்து வாங்கப்போகும் மழை..!