சிறிய பொருள்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்- "ரெட் பலூன்" படம் உணர்த்தும் பாடம்

சிறிய பொருள்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்-  "ரெட் பலூன்" படம் உணர்த்தும் பாடம்
Published on
Updated on
2 min read

மாணவர்களுக்கு ஒளிபரப்பபடும்  சிறார் திரைப்படம் 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி மேல்நிலைபள்ளியில் இன்று சிறார் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த மாதம் ரெட் பலூன் என்ற ஆஸ்கர் வெற்றி படம் திரையிடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக வந்த பிரித்திகா

சென்னை சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்றைய சிறார் ஒளிபரப்பப்பட்ட திரைப்படத்திற்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் பெண் காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாஷினி வருகை தந்தார். 40 நிமிட ரெட் பலூன் திரைப்படத்தை மாணவர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார்.

படத்தைச் சார்ந்த அனுபவங்களையும் படம் கூற வந்த கருத்துக்களையும் மாணவர்களிடையே கலந்துரையாடினார். இதுபோன்ற படங்கள் திரையிடப்படுவதன் மூலம் மாணவர்களுடைய கற்றல் திறன் அதிகரிக்கும் எனவும் இன்று திரையிடப்பட்ட படம் குறித்தும் பேசினார்.

ரெட் பலூன் உணர்த்தியது என்ன?

ரெட் பலூன் திரைப்படம் பார்த்தோம் இந்த படத்தில் இருந்து உயிரற்ற பொருள்களின் மீது அன்பு செலுத்துவதன் மூலம் நமக்கு மீண்டும் அதே அன்பு கிடைக்கும் என தெரிந்து கொண்டோம். சிறிய பொருள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் எனவும் உணர்ந்து கொண்டோம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com