லோகேஷ் கனகராஜின் “கைதி” திரைப்படம் - ரஷ்யாவில் இன்று வெளியீடு!!

லோகேஷ் கனகராஜின் “கைதி” திரைப்படம் - ரஷ்யாவில் இன்று வெளியீடு!!

கடந்த 2019 ஆம் ஆண்டின் பொழுது நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த திரைப்படம் கைதி.

பரபரப்பான சண்டை காட்சிகள் மற்றும் அப்பா,மகள் உறவு என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தான் கைதி திரைப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படமானது ரஷ்ய நகரங்கள் 121 ல் அமைந்துள்ள சுமார் 297 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.