கமலுக்காக பயன்படுத்திய ரகசிய தொழில்நுட்பத்தைப் பற்றி கூறிய - லோகேஷ் கனகராஜ்...!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையை தெறிக்க விட்டு வருகிறது விக்ரம்.

கமலுக்காக பயன்படுத்திய ரகசிய தொழில்நுட்பத்தைப் பற்றி கூறிய - லோகேஷ் கனகராஜ்...!

இத்திரைப்படமானது இந்தியாவை தாண்டிலும் உலக நாடுகளில் வெளியானது. வெளிநாட்டவர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது விக்ரம். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் தற்போதைய வசூல் ரூ.270 கோடி என சொல்லப்படுகிறது.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், மற்றும் நடிகர் சூர்யாவுக்கு வாட்ச் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனம் முதலியவற்றை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெறாத காட்சிகள் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை இளமையாக காட்ட (de-aging) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் தொழில்நுட்ப பணிகள் ஆனது முடிவதற்கு தாமதமாகி கொண்டே போனதால் அக்காட்சிகள் படத்தில் வைக்கப்படவில்லை என்றார். மேலும் அந்த காட்சிகளை விரைவில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளோம் என்றார். அதனோடு விக்ரம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் ஜூன் 28 ஆம் தேதி வெளியிட இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.