இசைஞானி இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் - கோ பூஜை, கஜ பூஜை செய்து சிறப்பு வழிபாடு..!!

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல  இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு நடக்கவிருக்கும் ஆயுள் விருத்தி ஹோமம் விழாவையொட்டி முதல்கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது.

இசைஞானி இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் - கோ பூஜை, கஜ பூஜை செய்து சிறப்பு வழிபாடு..!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததாக நம்பப்படுகிறது.

இதையடுத்து இக்கோவிலில் 60 முதல் 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, விஜயரத சாந்தி உள்ளிட்ட ஹோமங்களை செய்து சுவாமியை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

இந்நிலையில் இந்த கோவிலில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஆயுள் விருத்தி ஹோமம் செய்து கொள்வதற்காக வருகை தந்தார்.

அப்போது மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் அவரை கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, கோவில் கொடிமரத்தின் அருகே  இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில்  84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, அவருக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள்  நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.