மறவோம்.. மறவோம்!!!- சுதந்திர தின வாழ்த்துகளில், மருதநாயகத்தை நினைவு கூர்ந்த உலக நாயகன்!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வர, சொற்களின் நாயகன், ‘உலக நாயகன்’ கமலஹாசன் தனது வாழ்த்துக்களையும் மிகவும் வித்தியாசமான முறையில் பகிர்ந்துள்ளார்.

மறவோம்.. மறவோம்!!!- சுதந்திர தின வாழ்த்துகளில், மருதநாயகத்தை நினைவு கூர்ந்த உலக நாயகன்!

புரியாமல் பேசுவது என்றால், அனைவரும், உலக நாயகன் கமலஹாசனை தான் எடுத்துக் காட்டி சொல்வோம். ஆனால், அவர் இது வரை விட்ட அறிக்கையில், பாமரருக்குக் கூட புரியும் வண்ணம் இருந்த கடிதம், இந்த ஒன்றாகத் தான் இருக்கும். இந்தியா, தனது 75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. அதன் 75வது சுதந்திர தினம், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

‘மறவோம்.. மறவோம்!’...

அந்த வகையில், உலக நாயகன் கமலும், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!” என எழுதி பதிவிட்ட கமல், ‘மறவோம்.. மறவோம்!’ என அந்த கடித்தத்தை தொடங்கியுள்ளார்.

நிரைவேறா கனவு:

கமலின் நிறைவேறா கனவு என்றால், அது மருதநாயகம் தான். தனது வாழ்க்கையின் பாதியை இந்த படத்தின் ஆராய்ச்சிக்காகவும், அதன் உருவாக்கத்திற்காக செலவழித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய பங்கு வகித்த ஒருவராகப் பலராலும் இன்று வரும் போற்றப்படும் மருதநாயகம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை முடிக்கமுடியாமல், 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை தவித்து வரும் கமலின் ஆதங்கத்தை, தற்போது அவர் வெளியிட்ட கடித்தம் வெளிப்படுத்துகிறது.

யார் நீங்கள்? இது என் நாடு.

”25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் படமாக்கப்பட்ட காட்சியில், “ஒரு கடலையோ, காற்றையோ காட்டையோ, குத்தகைக்கோ, வாடகைக்கோ, சொந்தம் கொண்டாடவோ முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? இந்த மரத்தின் வயது இருக்குமா உங்களுக்கு? யார் நீங்கள்? இது என் நாடு. என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன். நாளை என் சாம்பலைன் மீது என் மகன் நடப்பான்” எனும், வசனத்தை பேசினேன். இது சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல, என் உள்ளத்தின் இருந்த தீ. அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தாய்நிலத்தை மீட்க களம் இறங்கிய ஒவ்வொருஅரின் உள்ளத்திலும் இருந்த தீ.

அணையா தீ!

என் உளத்தீ இன்னமும் அணையவில்லை. உங்களிடமும் இருக்கும் இந்தத் தீ நீடிக்கும் வரை, நம் வீடும் நாடும் மாநிலமும் ஊரும் தெருவும் சீராகும்.

தியாக மறவர்கள் பலர் தங்கள் இன்னுயிரை, சொந்த வாழ்க்கையை, சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடி பெற்றது இந்தச் சுதந்திரம் என்பது நம் வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால், மீண்டும் அதே நாட்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்பதும் வரலாறு. மறவோம் மறவோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோம்.

நினைவு கோர்வோம்!!!

தாயகம் காக்க தன்னலம் துறந்த அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களையும், இன்றைய நாளை நாம் இனிதே கொண்டாட எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களியும் நன்றியோடு நினைவு கூர்வோம். இவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.

ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார், மறுபக்கம் உலகநாயகன்!!!

வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை. வளர்த்துக்கொள்வோம்.” என அந்த கடிதம் முடிகிறது. மேலும், தனது கையெழுத்தை பதிவிட்ட கமல், ‘A proud Indian’ என பதிவிட்டிருக்கிறார். ஒரு புறம், ரஜினி, தனது ட்விட்டர் டிபி தேசிய கொடியாக மாற்றி, வீட்டு வாசலில் தேசிய கொடி பறக்க விட்ட நிலையில், கமலின் இந்த பதிவு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.