விஷாலுடன் 3வது முறையாக இணைந்த முன்னணி நடிகர்..!!

விஷாலுடன் 3வது முறையாக இணைந்த முன்னணி நடிகர்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. அந்த வகையில் இரண்டாவது முறையாக விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படம் முடிவடைந்து வரும் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் விஷாலை வைத்து அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்க, பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முன்னணி நடிகரான பிரபு இணைந்துள்ளார். இந்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் பிரபு விஷாலுடன் தாமிரபரணி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.