200 படங்களுக்கு மேல் நடித்தும் மோகனுடன் ஜோடி சேராத ஒரே நடிகை.. 51 வயதில் நனவான கனவு

200 படங்களுக்கு மேல் நடித்தும் மோகனுடன் ஜோடி சேராத ஒரே நடிகை.. 51 வயதில் நனவான கனவு

தமிழில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்றவர்.

கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் பிரபலமானவர்.

Mohan to make a comeback in an action avatar | Tamil Movie News - Times of  India

ஒரு வருடத்தில் அதிக திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது. அதாவது அவர் கிட்டத்தட்ட 17 படங்கள் ஒரே வருடத்தில் நடித்திருக்கிறார். இப்படி பல சாதனையை நடத்திக் காட்டிய மோகன் திடீரென திரைத்துறையில் இருந்து காணாமல் போனார். தற்போது மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

khushbu sundar weight loss: Khushboo Sundar - actress kushboo sundar weight  loss secret - walking and diet » Jsnewstimes


இந்த தகவலை பகிர்ந்த குஷ்பு, கனவு நனவானது போல இருக்கிறது என்றும், மோகனுடன் முதல் முறையாக மோகனுடன் நடிக்க இருக்கிறேன், மௌனராகம் படத்தில் மோகனை பார்த்ததில் இருந்தே அவருடன் நடிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பை அளித்த விஜய்ஸ்ரீக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Pic Talk: Shocking Transformation Of Khushboo - Movie News

தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்க இருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப்படம் மைக் மோகனுக்கு ஒரு அதிரடியான திருப்பத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.