பத்தல பத்தல பாடலை பாடிய திருமூர்த்தியின் ஆசையை அறிந்து - ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் சேர்த்துவிட்ட நடிகர் கமல்ஹாசன்!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

பத்தல பத்தல பாடலை பாடிய திருமூர்த்தியின் ஆசையை அறிந்து -  ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் சேர்த்துவிட்ட நடிகர் கமல்ஹாசன்!!

நடிகர் கமல்ஹாசனே எழுதி பாடியிருக்கும் பத்தல பத்தல பாடலானது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த பாடலை பார்வைத் திறன் அற்ற மாற்றுத்திரனாளியான பாடல்களை பாடும்  திருமூர்த்தி கமலின் பத்தல பத்தல பாடலுக்கு கைகளில் இசையமைத்து பாடியதன் வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் பின் இந்த வீடியோ பெரிதும் பகிரப்பட்டு வைரலாகத் தொடங்கியது. 

இந்த வீடியோ வைரலான நிலையில் நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இதன் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமூர்த்தியின் விருப்பமென்பது தான் ஒரு இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதே, இதனை தெரிந்து கொண்ட நடிகர் கமல் இசைக்கலைஞர் ஆகுவதற்கான உரிய திறன்கள் அனைத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என திருமூர்த்திக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். 

அலோசனை வழங்கியதோடு நின்றுவிடாமல் நடிகர் கமல் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்.

மேலும் திருமூர்த்திக்கு இசை கற்றுக்கொள்ள ஆகும் முழுசெலவுகளையும் தானே ஏற்பதாகவும் அவர் வருங்காலத்தில் சிறந்த ஓர் இடத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.