சிரிப்பை சிதறவிட்ட கீர்த்தி...மனதை பறிக்கொடுத்த ரசிகர்கள்.!!

சிரிப்பை சிதறவிட்ட கீர்த்தி...மனதை பறிக்கொடுத்த ரசிகர்கள்.!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஜொலித்தவர் கீர்த்தி சுரேஷ், இவருடைய தந்தை தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு ,மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதைதொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமொ உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து  நடித்திருந்தார்.

கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகின்றார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டும் வருவார்.

அந்தவகையில் தற்போது சுடிதாரில் அழகாய் சிரித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.