கயல் ஆனந்தியின் - டைட்டானிக் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கயல் ஆனந்தியின் - டைட்டானிக் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கலையரசன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரும் பரிட்ச்சையமானவர் தான் கலையரசன். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குதிரைவால்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர். 

இதைத் தொடர்ந்து இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக். கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படதில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்' சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

மே 6-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் 'டைட்டானிக்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.