பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை கஜோலுடன் நடனமாடிய கரண் ஜோஹர்.. வைரலாகும் வீடியோ..!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை கஜோலுடன் நடனமாடிய கரண் ஜோஹர்.. வைரலாகும் வீடியோ..!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை கஜோலுடன் சேர்ந்து கரண் ஜோஹர் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் நட்சத்திர தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் தனது 50வது பிறந்தநாளை மும்பையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார்.

கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் மே 25 அன்று கொண்டாடப்பட்டது. இந்த விருந்தில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருவிழா போல் நடந்தேறிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஆடல் பாடல் என களை கட்டியது. இந்த நிலையில் பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு கரண் ஜோஹர் நடிகை கஜோல் இணைந்து ஆடிய அசத்தல் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

A post shared by


முதன்முறையாக இசையமைப்பாளராக களமிறங்கிய இயக்குனர் மிஸ்கின்...! படத்தின் டைட்டில் இதோ!

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

”சவரக்கத்தி” திரைப்படத்தின் இயக்குனர் ஆதித்யா அவர்களின் இயக்கத்தில், மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. 

மாறா, குதிரைவால் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பையும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

 

இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு திருப்புமுனையாக அமையும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். தமிழின் மிக முக்கியமான இயக்குனராக கருதப்படும் மிஷ்கின் முதன்முறையாக “டெவில்” திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்களை எழுதியும், பல பாடல்களை பாடியும் உள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் மிக முக்கிய பங்கு இவருடையதாக தான் இருக்கும். இந்நிலையில் தற்போது இயக்குனர் ஆதித்யா இயக்கும் ”டெவில்” திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்களை கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

”நாற்கரப்போர்” திரைப்படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதையாக நிச்சயம் அமையும் - நடிகர் லிங்கேஷ்!

”நாற்கரப்போர்” படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை...நிச்சயம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என நடிகர் லிங்கேஷ் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் லிங்கேஷ். அதனைத்தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி போன்ற படங்களின் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இதனையடுத்து காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. 

இந்நிலையில் தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றியுடன் இணைந்திருக்கிறார். ஸ்ரீவெற்றி இயக்கும் ”நாற்கரப்போர்” என்ற படத்தில் கதையின் நாயகனாக லிங்கேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கதாநாயகி அபர்நதி நடித்து வருகிறார். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில் நிறைவுபெற்றிருக்கிறது. தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. 

 

இதனிடையே “நாற்கரப்போர்” திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்றும், தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை என்றும், தரமான இயக்குனர்களை  தமிழ் சினிமா எப்போதும் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம் என்றும், இந்தப்படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நடிகர் லிங்கேஷ் தெரிவித்திருக்கிறார்.

IMDB கொடுத்த ரேட்டிங்.... "மாமனிதன்" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு IMDB நிறுவனம் ரேட்டிங் கொடுத்துள்ளது.

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இப்படத்தில் முதன் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்த  இப்படத்தை
தமிழகம் மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். 

 

படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருவதோடு, குடும்ப சகிதமாக முக்கியமாக பெண்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். 

இந்நிலையில் சிறந்த படங்களுக்கு மதிப்பீடு கொடுக்கும் IMDB நிறுவனம் ”மாமனிதன்” படத்திற்கு 8.1 /10 கொடுத்துள்ளது. இந்த மதிப்பீடு படத்திற்கு கிடைத்த சிறந்த பாராட்டாகவே கருதப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வெளியான திரைப்படங்களில் மாமனிதன் படத்திற்கு இவ்வளவு மதிப்பெண் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, முதல் நான் லீனியர் படமான இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

தனது வித்தியாசமான முயற்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் ஆர். பார்த்திபன் இயக்கம், நடிப்பு என இரண்டையும் சமமாக செய்து வருகிறார். தற்போது அவரின் கைவண்ணத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ளது இரவின் நிழல் படம்.

கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

 

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டது இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தைக் காண சினிமா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிடைக்காமல் போனது. எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கிவிட வேண்டும் என்றே இந்த உலக சாதனை படத்தை உருவாக்கி உள்ளார் பார்த்திபன். 

இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் : "டெவில்" படத்தின் படப்பிடிப்பு தீவிரம் !!

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த எஸ்.  இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக  “டெவில்” மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.