காமராஜர் வாழ்க்கை படம் 2-ம் பாகம்

காமராஜர் வாழ்க்கை படம் 2-ம் பாகம்

பெருந்தலைவர் காமராஜர்  படத்தின் இரண்டாம் பாகம் பெருந்தலைவர் காமராஜ் 2’ என்ற பெயரில் தயாராகிறது.மறைந்த முதல்-அமைச்சர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு காமராஜ் என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி 2004-ல் வெளியானது.

ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கி தயாரித்து இருந்தார். காமராஜர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இந்த படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. தற்போது காமராஜ் படத்தின் இரண்டாம் பாகம் ‘பெருந்தலைவர் காமராஜ் 2’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்திலும் காமராஜரின் அரசியல் மற்றும் அவரது ஆட்சி கால சாதனைகள் இடம்பெறுகின்றன.  

காமராஜரின் முக்கிய திட்டமான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதுபோன்ற காட்சியை படமாக்கி படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படத்தையும் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கி தயாரிக்கிறார்.

இதில் காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடிக்கிறார். தீனா தயாளன், வெங்கட்ராமன் ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் சில கதாபாத்திரங்களில் பிரபல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர்கள் முத்துலிங்கம், செந்தூர் நாகராஜன், புருஷோத்தமன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.