“விக்ரம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்!

விக்ரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது பேசிய நடிகர் கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

“விக்ரம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்சியில் கமல் பேசும் பொழுது நான்கு வருடங்களாக எனது நடிப்பில் எந்தவொரு திரைப்படமும் வெளியாகவில்லை அதற்காக மன்னிப்பு கெட்டுக்கொள்கிறேன். 

மேலும் பேசிய அவர் நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் இருபது ரூபாயை செலவு செய்வார்கள். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக்கொண்டிருக்கிறது என்றார். மேலும் லோகேஷ் கனகராஜுக்க்கு நன்றிகளை இப்போது தெரிவிக்க மாட்டேன், அதற்கான நன்றியை நான் வேற மாதிரி கூறிக்கொள்கிறேன். நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. விக்ரம் திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றார்.