"பூஸான்" சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் திரைப்படம்.. உலகளவில் கலக்க ரெடியாகும் தமிழ் படம்..!

ஓபன் சினிமா என்ற பிரிவின் கீழ் பூஸான் திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் திரைப்படம் திரையிடப்படுகிறது..!

"பூஸான்" சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் திரைப்படம்.. உலகளவில் கலக்க ரெடியாகும் தமிழ் படம்..!

திரைப்பட விழாக்கள்:

உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அப்படி நடைபெறும் விழாக்களில் இந்திய சினிமா மட்டுமின்றி உலகளவில் எந்த மொழியில் வெளியான படங்களையும் திரையிட அனுமதி கோரி படங்களை அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் படங்களில் சிறந்த படங்களை அந்ததந்த திரைப்பட விழா குழுக்கள் தேர்வு செய்து, விழா நடைபெறும் நாட்களில் பல பிரிவுகளின் கீழ் திரையிடுவர். 

சிறிய பட்ஜெட் படங்கள்:

இதன் மூலம் பிற மொழி, பிற நாட்டு படங்களை உலகமெங்கும் கொண்டு சேர்க்க முடியும். சில நேரங்களில் இந்த திரைப்பட விழாக்களில் சிறந்த படங்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும். இதுபோன்ற திரைப்பட விழாக்களுக்காகவே சிறிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கப்படுவதும் உண்டு. 

பூஸான் சர்வதேச திரைப்பட விழா:

அவ்வாறு உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேச திரைப்பட விழா வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் திரையிட தேர்வாகியுள்ளது. 

விக்ரம்:

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவில் எண்டரி கொடுத்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட கைதி படத்தோடு தொடர்புடையதாக இந்தப் படம் அமைந்திருந்தது. 

ப்ரோமோஷன்:

கமல்ஹாசனோடு, ஃபகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா என பலரும் இந்தப் படத்தில் நடித்து அட்டகாசம் செய்திருந்தனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தை எந்த அளவு ப்ரோமோஷன் செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் கலெக்‌ஷனில் அப்படம் வெற்றி பெறும். அதற்காக ஒவ்வொரு புது படங்களும் வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுப்பர். 

சூப்பர் டூப்பர் ஹிட்:

அப்படி கமல்ஹாசன் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்கு கேன்ஸ் திரைப்படவிழாவை பயன்படுத்திக் கொண்டார். முதன்முறையாக NFT-யில் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் விற்கப்பட்டது. இப்படி அவர் செய்த ப்ரோமோஷனும், லோகேஷ் கனகராஜின் அதிரடியான திரைக்கதையும் சேர்ந்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கச் செய்தது. 

பூஸான் விழாவில் விக்ரம்:

வசூலிலும் சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அதன் படி தென் கொரியாவில் நடைபெறவுள்ள பூஸான் திரைப்பட விழாவில் திரையிட விக்ரம் திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழுவினரும் படத்தை தேர்வு செய்திருக்கின்றனர். 

ஓபன் சினிமா:

அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதி வணிக மற்றும் கலைப் படங்களின் கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் ”ஓப்பன் சினிமா” என்ற பிரிவில் விக்ரம் படம் திரையிடப்படவுள்ளது.