சமீபத்தில் வெளியான விக்ரம் படம் 50 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றிப் பெற்றதையொட்டி, விக்ரம் படக்குழுவிற்கு அனைவரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். இப்படம் உலகளவில் ரூ 400 கோடி வசூல் செய்துள்ள நிலையில், தனது அடுத்தப் படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப் படத்தில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி, பலரது வாழ்த்துகளைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து, தனது மிகவும் முக்கிய மற்றும், ஆஇவராலும் பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்ட படமான இந்தியன் 2 படத்திற்கான ஷூட்டிங் தொடரவுள்லதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கருடன் தனது நீண்டகால தாமதமான திரைப்படமான ‘இந்தியன் 2’ க்கான தனது வேலையை மீண்டும் தொடங்க உள்ளார். இப்படத்திற்கான தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்காக கமல்ஹாசன் மூன்று வாரங்கள் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அறிக்கைகளின்படி, படம் செப்டம்பரில் தொடங்கும், என்றும் நடிகர் அடுத்த மாதம் அமெரிக்காவில் படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருப்பார். இயக்குனர் ஷங்கரே இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இப்படம் விஜிலண்ட் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
படம் முதலில் 2017 இல் அறிவிக்கப்பட்டு, 2019 இல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பில் இருந்த கிரேன் உடைந்ததில் 3 உதவி இயக்குநர்கள் காயமடைந்து உயிரிழந்தனர். பின், படபிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருந்ததால், தற்போது, மீண்டும் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
‘இந்தியன் 2’ 1996 இல் வெளியான கமல்ஹாசனின் பழைய திரைப்படமான ‘இந்தியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இது ஒரு கல்ட் கிளாசிக் மற்றும் கதை அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் ஊழலுக்கு எதிரான வலுவான செய்தியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.