வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் 

கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் 

தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். 
தேசிய விருது வென்ற இவர், தற்போது விஜய்சேதுபதி - சூரி நடிப்பில் 'விடுதலை' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இதைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய்க்கும் கதை கூறியுள்ளார்

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.