விக்ரம் : CODE RED ப்ளாக் அண்ட் ஒயிட்டில் டெரராக வெளியான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

விருமாண்டி போஸ்டருடன் ஒத்துப்போன விக்ரம் ஃப்ர்ஸ்ட் லுக்..!

விக்ரம் : CODE RED ப்ளாக் அண்ட் ஒயிட்டில் டெரராக வெளியான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
தேர்தலுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தார் கமல். இயக்குநர் சங்கரும் ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்க மும்முரமாக இறங்கினார். அதனால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் உருவாகி வந்தது. இப்படத்தின் டைட்டில் வெளியீட்டையே டீசராக வெளியிட்டது படக்குழு. இந்த டைட்டில் டீசர் அனைத்து தரப்பினரிடையும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்-காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்தநிலையில், விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன் படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் வெளியிட்டார். விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், விக்ரம் மூவரின் முகங்களில், ஒரு ஒரு புறமும் மூவரின் முகங்கள் கொண்டதாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவப்பு நிறத்தில் code red என்ற வாசமும் இடம்பெற்றுள்ளது.
1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் தமிழ் திரைப்பட உலகில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரம். போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசனின் நடிப்பு அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது. 
தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைட்டில் டீசரை வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட இந்தியன் படத்தை போலவே இருந்தாலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய கதைகளை கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் இணையங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது விருமாண்டி படத்தின் போஸ்டரை ஒத்தே வெளிவந்துள்ளால் வித்தியாசமான திரைக் களத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.