டைட்டில் ரோலில் காஜல் அகர்வால் !!! இயக்குனர் இவர் தான்!

நடிகை காஜல் அகர்வால் ’உமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டில் ரோலில் காஜல் அகர்வால் !!! இயக்குனர் இவர் தான்!

பொதுவாக நடிகைகள் டைட்டில் ரோலில் நடிப்பது மிகவும் அரிதான நிகழ்வு. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது டைட்டில் ரோலில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் ’உமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் உமா கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்தை விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா (Tathagata Singha) என்ற இயக்குனர் இயக்க உள்ளதா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை அவிஷேக் கோஷ் என்பவர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  மேலும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்திற்காக காஜல் அகர்வால் கால்சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.