பிரபல நட்சத்திரங்களை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கிப்ட்!!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது.

பிரபல நட்சத்திரங்களை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கிப்ட்!!

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள காஜல் அகர்வால், கோல்டன் விசா வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, திரிஷா உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.