கேஜிஎஃப் 2 நடிகர் மோகன் ஜுனேஜா மரணம்; வருத்தத்தில் சாண்டல்வுட் !!

கேஜிஎஃப் 2 நடிகர் மோகன் ஜுனேஜா நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு, தனது 54 வயதில் இறந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். இதனால் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.

கேஜிஎஃப் 2 நடிகர் மோகன் ஜுனேஜா மரணம்; வருத்தத்தில் சாண்டல்வுட் !!

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மோகன் ஜுனேஜா இன்று, சனிக்கிழமை, அதாவது மே 7ம் தேதி காலை தனது இறுதி மூச்சை விட்டார். கேஜிஎஃப் : அத்தியாயம் 2இல் நடித்த நடிகரான இவர், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பதிலளிக்காமல் அவதிப் பட்டுக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இன்று காலை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 54 வயது. இவர் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் மோகன் நடித்தார். சமீபத்தில், அவரது பிளாக்பஸ்டர் ஹிட் கேஜிஎஃப்: அத்தியாயம் 2. கேஜிஎஃப் ஒன்றிலும் அவர் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டாரா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர், அனைத்து வீடுகளிலும், நன்றாக பிரசித்தி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், செல்லடா படத்தில் நடித்ததற்காக அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சாண்டல்வுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான, கணேஷ், இவரது படத்துடன் ஓம் சாந்தி என ட்வீட் செய்துள்ளார். மோகன் ஜுனேஜாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.

கர்நாடகாவின் தும்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் தனது கல்வியை முடித்தார். பின்னர், நடிப்புப் பயணத்துக்காக நகரத்துக்குக் குடியேறினார். இவரைப் பற்றி சிறிது தெரிந்துக் கொள்ளலாம். 

கர்நாடக மாநிலம் துருவேகெரே மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், பெங்களூரில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு சிவில் இன்ஜினியர், எனவே, அவரது பள்ளிப்படிப்பு, பல இடங்களில் மாற்றி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரோ, படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. ஒருமுறை, "என் தந்தை, அவரைப் போலவே என்னையும் ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் நான் படிப்பில் மோசமாக இருந்தேன்." என்று கூறினார். அவர் எப்போதும் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு இவர் மூன்று படங்கள் பார்ப்பாராம். பின், கலை மற்றும் நாடகத்தைப் புரிந்து கொள்ள நாடகப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.

ஷங்கர் நாக் (Shankar Nag) இயக்கிய வால் போஸ்டர் மூலமாகத் தான் மோகன் நடிகராக அறிமுகமானார். தன்னைப் போலவே நாடகம், எழுத்து, மேக்கப், நடிப்பு போன்றவற்றில் ஆர்வமாக இருந்த ஷங்கர் நாகுடன், மோகன் நெருங்கிய நட்புக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது நட்பைக் குறித்து ஒரு முறை ஏசிய மோகன், “நான் இரவில் வசனம் எழுதுவேன், பகலில் நடிப்பேன். இருப்பினும், ஒரு அடையாளத்தைப் பெற நான் தொடர்ந்து போராடினேன்” என்று கூறியிருந்தார்.

நாகதிஹள்ளி சந்திரசேகரின் தொலைக்காட்சித் தொடரான ​​வாடரா மூலம் அவருக்கு மிகவும் தேவையான இடைவெளி கிடைத்தது . "இது 1000 எபிசோட்களுக்கு மேல் ஓடியது, இறுதியாக எனது பரந்தமா பாத்திரம் எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது." என்று பெருமையாக எப்போதும் மோகன் பேசுவார். இவரது இழப்பு, சாண்டல்வுட்டிற்கு வேதனை அளித்திருக்கிறது. இவரது ஆத்மா சாந்தி அடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.