கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார் - அஞ்சலி செலுத்தும் திரையுலகினர்..
சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் -2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா. இவர் குணச்சித்திடம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருபவராவார். மேலும் இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் இந்திப் போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். தற்போது திரையரங்கில் வெளியான கே.ஜி.எஃப் -2 திரைப்படத்திலும் இவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் சின்னித்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மோகன் ஜூனேஜா பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்துள்ளார். மேலும் அவருடைய இறுதி நேர சடங்குகள் இன்று நடைபெற்றும் வருகிறது. இவரின் மறைவானது கன்னட திரைப்பட உலகிற்கு அதிர்ச்சியை அளித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.