போலீஸ் ஸ்டேஷனில் பச்சையா புளுகிய ஜூலி... கொடுத்த காசு, பல்சர் பைக்கை வாங்க சதியாம்...!!

பிக்பாஸ் புகழ் ஜூலி தன் காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறி கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷனில் பச்சையா புளுகிய ஜூலி... கொடுத்த காசு, பல்சர் பைக்கை வாங்க சதியாம்...!!

பிக்பாஸ் என்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி (எ) மரியா ஜூலியானா. இவர் தனது பெற்றொருடன் பரங்கி மலை ஈரோப்பியன் லேன் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜூலி அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் அண்ணா நகர் 2-வது அவென்யூவில் உள்ள பிரபல அழகு நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ், என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, தன்னிடம் இருந்து பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், தான் அழகு நிலையத்துக்கு சென்ற போது மேலாளர் மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்பவைத்த நிலையில், மனிஷுக்கு தான் புதிய இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்து 2.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக ஜூலி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூறி பேசியதாவும், பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியதாக தெரியவந்தது.

சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாகப் பழக, அதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு மனீஷ் உடனான காதலை ஜூலியே துண்டித்து அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலியை அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டு, தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும் , அவர் இல்லாமல் தன்னால் வாழ இயலாது எனவும் கூறி அழுது அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அடிக்கடி போன செய்யும் மனீஷின் தொல்லையில் இருந்து விடுபடவும், அவரை மிரட்டுவதற்காகவே ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பி அளித்தார். 

அதனையடுத்து ஜூலியும், மனிஷும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போலீசார் அழித்துவிட்டு ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக ஜூலி புகார் அளித்த நிலையில், ஜூலிதான் காதலைத் துண்டித்து காதலனை தவிர்த்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணை மூலம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.