ரூ.48.1 லட்சம் செலவில் விருந்தளித்து கொண்டாடிய ஜானி டெப்.. ஏன் தெரியுமா?

ரூ.48.1 லட்சம் செலவில் விருந்தளித்து கொண்டாடிய ஜானி டெப்.. ஏன் தெரியுமா?

கடந்த 2015ம் ஆண்டு ஜானிடெப் மற்றும் அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 15 மாதங்களில் விவாகரத்து பெற்ற நிலையில்,  2018 ஆம் ஆண்டில் ஜானி டெப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து ஆம்பர் ஹெர்ட் கட்டுரை வெளியிட்டதாக கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த டெப், ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து, 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜானிடெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அவருக்கு 10 மில்லியன் டாலரை இழப்பீடு தொகையாகவும், 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீடு தொகையாகவும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவுவிட்டது.

இந்நிலையில், முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தி இருக்கிறார்.

தனது மனைவிக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கில் வெற்றி பெற்றதை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடியுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் உள்ள ‘வாரணாசி’ என்ற இந்திய உணவகத்திற்கு, நண்பர்கள் ஜெஃப் பெக் உட்பட 21 பேருடன் ஜானி டெப் சென்றுள்ளார்.

மாலை ஏழு மணிக்கு சென்ற அவர்கள் நள்ளிரவு வரை அங்கிருந்துள்ளனர். அவர்களுக்கு ஷிஷ் கெபாப்ஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா மசாலா, லேம்ப்கராஹி, பட்டர் சிக்கன், இறால் என விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்துக்காக, இந்திய மதிப்பில் சுமார் 48.1 லட்சத்தை ஜாலியாக செலவு செய்துள்ளார் ஜானிடெப்.