உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம்ரவி..!

உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம்ரவி..!

மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு நேரில் சென்று நடிகர் ஜெயம் ரவி அஞ்சலி செலுத்தினார்.

நிலையூர் பகுதியை சேர்ந்த செந்தில் கடந்த 10ஆண்டுகளாக  ஜெயம் ரவியின் தீவிர ரசிகராகவும், ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார் செந்தில். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது தொழில் காரணமாக லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக  உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த ஜெயம் ரவி, நிலையூர் பகுதியில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்காக 5 லட்சம் மற்றும் கல்விச் செலவை ஏற்பதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.