சிறு வயதில் தனது அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜான்விகபூர்.!!

சிறு வயதில் தனது அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜான்விகபூர்.!!

பாலிவுட்டில் படு பிசியான நடிகையாக வலம் வருவதோடு, ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைத்துள்ளவர் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவி-போனிகபூரின் மகள் ஆவார்.

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்ட இவர், அவ்வப்போது விதவிதமான மார்டன் உடையில் இருக்கும் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். 

இந்தநிலையில் இன்று நடிகை ஸ்ரீதேவியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் என்பதால், அவருடைய மகளான ஜான்வி, தனது  அம்மா ஸ்ரீ தேவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.