விஜய் தேவர்கொண்டாவுடன் நான் நடிக்கவில்லை - ஜான்வி கபூர்!

விஜய் தேவர்கொண்டாவுடன் நான் நடிக்கவில்லை - ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி, விஜய் தேவர்கொண்டாவின் ஜனகனமன திரைப்படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகளான ஜான்வி அடுத்தடுத்து சில இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாக உள்ள ஜனகனமன திரைப்படத்தில் தான் நடிப்பதாக வெளியான  தகவல் பொய்யானது என ஜான்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.