ஜெயிலர் திரைப்படம் வெளியீடு; இரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

ஜெயிலர் திரைப்படம் வெளியீடு; இரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Published on
Updated on
1 min read

இரசிகர்களின் பேராதரவுடன் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ”ஜெயிலர்” திரைப்படம் இன்று வெளியாகியது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனத்தில் வெளியான காவாலா பாடல் 10 மில்லன் பார்வையாளர்களை கடந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து வெளியான ஹுக்கும், ரத்தமாரே பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் திரைப்படத்தை காண காத்திருந்த நிலையில், தமிழ் நாட்டில் மட்டும் 600 முதல் 700 திரையரங்குகளில் படம் வெளியாகியது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த சில ரசிகர்கள் சென்னை வருகைக்கு தந்து ஜெயிலர் திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் டெலாவர் பகுதியில் உள்ள திரையரங்கில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் உற்சாகத்துடன் காண வந்தனர். ரஜினிகாந்த்தின் முகம் பதித்த டி-சர்ட் அணிந்து வந்து, ரஜினிகாந்த் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com