ஜகமே தந்திரம் பார்ட் 2 இருக்கா? யப்பா நெட்பிளிக்ஸ், நீ யாரு பெத்த புள்ளையோ எங்கள காப்பாத்திட்ட 

இதுல கிளைமாக்ஸ்ல செகண்ட் பார்ட் வர்ற மாதிரி ஒரு டையலாக் வேற, போர் ஆரம்பிக்க மட்டும்தான் முடியுமாம், அவன் வேற திரும்பி வருவானாம்.

ஜகமே தந்திரம் பார்ட் 2 இருக்கா? யப்பா நெட்பிளிக்ஸ், நீ யாரு பெத்த புள்ளையோ எங்கள காப்பாத்திட்ட 

நெட்ப்ளிக்சில் ரிலீசான ஜகமே தந்திரம் படம் ரிலீஸான முதல் நாளிலேயே  நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகின்றன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் பெரியளவில் சொதப்பி விட்டார் என்றும், தனுஷை வெச்சு செய்துவிட்டார் எனவும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

ஜகமே தந்திரம்

யப்பா நெட்பிளிக்ஸ், நீ யாரு பெத்த புள்ளையோ, இந்த படத்தையும் காசு குடுத்து வாங்கி, தமிழ்நாட்டுல இருக்கற அத்தனை தியேட்டர்காரங்களையும் காப்பாத்தி விட்டுட்டே.

ஒரு கேங்ஸ்டர் படம்னா என்ன என்ன சீன் எல்லாம் வைக்கலாம்னு நாளைக்கு வரும்போது எழுதிட்டு வாங்கன்னு அசிஸ்டண்ட் டைரக்டர்களுக்கு எல்லாம் ஹோம் ஒர்க் குடுத்துட்டு குப்பற படுத்து தூங்கிட்டு, காலைல எந்திரிச்சு அப்டியே ஷூட்டிங் போனா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கு படம்.

எழுதிட்டு வந்த சீன்ல சுமாரா இருக்கற 50 சீன் எடுத்து குலுக்கி போட்டு, அதை அப்டியே எடுத்து வச்சா, அது ஜகமே தந்திரம் பர்ஸ்ட் ஹாப், சுமாரா இருக்கற சீன் எல்லாம் எடுத்தாச்சு, ஷூட்டின்னு லண்டன் வந்துட்டு சும்மாவா போக முடியும்னு கண்ட படி கண்றாவியா எடுத்தா அது ஜகமே தந்திரம் செகண்ட் ஹாப்.

மதுரைல இருக்கற ஒரு லோக்கல் ரவுடி, லண்டன்ல இருக்கற பெரிய கேங்ஸ்டர கொன்னா எப்படி இருக்கும்... சத்தியமா இதை விட நல்லா இருந்து இருக்கும் ஒழுக்கமா எடுத்து இருந்தா. தனுஷ் ஒரு சீன், லண்டன்ல இருக்கற கேங்ஸ்டர் ஒரு சீன், லண்டன்லயே இருக்கற இன்னொரு கேங்ஸ்டர் இன்னொரு சீன், அவ்ளோதான் இதையே மானே தேனே பொன்மானேன்னு போட்டு மாத்தி மாத்தி எடுத்துட்டே இருந்தா....ஆவ்வ்வ் இன்டெர்வல்.

இன்டெர்வல் முடிஞ்ச உடனே, கொஞ்சம் அம்மா பாசம், கொஞ்சம் நண்பன் செண்டிமெண்ட், கொஞ்சம் காதல் செண்டிமெண்ட், நிறைய இலங்கை தமிழர்கள், தமிழர்களுக்கு துரோகம் பண்ணிட்டாங்க, அகதிகள் இது எல்லாத்தையும் சேத்தி ஒளப்பி வச்சா அது செகண்ட் ஹாப். ஆனாலும் இந்த இலங்கை தமிழர்கள் நம்ம தமிழ் சினிமாகாரனுக கிட்ட மாட்டிகிட்டு படற பாடு இருக்கே, கொடுமை. பாவம்டா விட்ருங்க. உங்களுக்குத்தான் விவசாயம் இருக்கே, அதையே டீல் பண்ணுங்க.

அப்பறம், லண்டன்ல டுமிக்கீல் டுமுக்கீல்னு எத்தனை பேர சுட்டு கொண்ணாலும், குண்டு வச்சு கொன்னாலும் ஒரு போலீஸ் கூட வராதுன்னு கண்டு பிடித்து சொன்ன அண்ணன் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றி.

கார்த்திக் சுப்புராஜ் இது உங்க படம்னா இதுக்கு முன்னாடி வந்த படம் எல்லாம் யாரு எடுத்து குடுத்தா, இல்ல அது எல்லாம் உங்க படம்னா, இது யாரு எடுத்து குடுத்தா. கொடுமைடா.

இந்த கொடுமையெல்லாம் விட மலையாள சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜோஜு ஜார்ஜை மொக்கை படுத்தியது தான் கொடுமையே. அவரு கொள்ளப்படும் சீனில் பாருங்க ஏதோ துப்பாக்கியா இருந்தா கூட பரவாயில்லை. ஒரு வயதான டான் அருவா எடுத்து வீசுறப்பக் கூட கட்டி வச்ச பாட்ஷா மாதிரி வெட்டு வாங்குறாரு மனுஷன் பங்கம் பங்கம் போங்க.

இதுல கிளைமாக்ஸ்ல செகண்ட் பார்ட் வர்ற மாதிரி ஒரு டையலாக் வேற, போர் ஆரம்பிக்க மட்டும்தான் முடியுமாம், அவன் வேற திரும்பி வருவானாம். செகண்ட் பார்ட் எடுக்கற மாதிரி எண்ணம் எல்லாம் இருந்தா அதை இப்போவே இங்கயே நல்லா ஆழமா குழி தோண்டி பொதச்சிருங்க.