முழுசா தென்னிந்திய நடிகரா மாறிய சியானை பார்....!

முழுசா தென்னிந்திய நடிகரா மாறிய சியானை பார்....!
Published on
Updated on
1 min read

நடிகர் சியான் விக்ரம் கன்னடத்திலும் எண்ட்ரீ கொடுக்கப்போவதாக தகவல்...

நடிகர் விக்ரம்:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி  நடிகர்களுள் ஒருவரான சியான் விக்ரம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் 1990 ஆம் ஆண்டு டைரக்டர் பாலா இயக்கிய சேது படத்தை தொடர்ந்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் , சாமி, பிதாமகன் , ஐ போன்ற தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரனார். 

கோப்ரா:

இந்நிலையில், இமைக்கா நொடிகள் மற்றும் டிமாண்டி காலணி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “கோப்ரா”. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

ப்ரொமோஷன் பணிகள்:

இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள  “கோப்ரா” படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி,  சியான் விக்ரம் இன்று ஐதராபாத்தில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாட உள்ளார். 

பொன்னியின் செல்வன்:

கோப்ரா படத்தை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதி விக்ரம் நடித்த பொன்னியின் செல்வம் முதல் பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

கன்னடத்தில் கமிட்டா?:

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில்,  இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் ”சியான் 61” படத்தில் நடிக்க விக்ரம் கமிட்டாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து, கன்னட டைரக்டர் பவன் குமார் இயக்கும் “பை லிங்குவல்” படத்தில் நடிகர் விக்ரமை நடிக்க வைப்பதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒருவேளை இந்த படத்தில் விக்ரம் கமிட் ஆனால், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியை தொடர்ந்து, சாண்டல்வுட்டிலும் எண்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியானதை தொடர்ந்து, விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com