42 வயதில் காதலில் விழுந்த நடிகர் பிரேம்ஜி!! பாடகியுடன் வெளியான புகைப்படம் செம வைரல்

42 வயதில் காதலில் விழுந்த நடிகர் பிரேம்ஜி!! பாடகியுடன் வெளியான புகைப்படம் செம வைரல்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான கங்கையமரனின் மகன் தான் பிரேம்ஜி  அமரன். இவர் தமிழில் வல்லவன் படம் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சென்னை 600028, சத்தம் போடாதே, தோழா என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். அதுமட்டுமில்லாமல், இவரின் அண்ணனும், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரும் ஆன வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி கண்டிப்பாக நடித்து விடுவார்.

இப்படி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமான பிரேம்ஜி, 42 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் பிரேம்ஜி பாடகி ஒருவரை காதலிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி பார்த்தால் கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை தான் பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் நிரூபணம் ஆகும் வகையில் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.