தளபதி விஜய், நெல்சன், அனிருத்..சும்மா மாஸான டான்ஸ்...இணையத்தில் வைரலாகும் ஸ்டைலிஸ் ப்ரோமோ!!

தளபதி விஜய், நெல்சன், அனிருத்..சும்மா மாஸான டான்ஸ்...இணையத்தில் வைரலாகும் ஸ்டைலிஸ் ப்ரோமோ!!
Published on
Updated on
1 min read

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. அனிருத்தின் மாஸான இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் ரீலிசுக்காக அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ஒரு முக்கிய அப்டேட் இன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்தின் புதிய அறிவிப்பு இன்று ஏழு மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் அந்த அறிவிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த அறிவிப்பில்  ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புரமோ வீடியோவில் விஜய், அனிருத் மற்றும் நெல்சன் டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில்  ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் இன்னும் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது இந்த பாடலும் அதனுடன் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com