படப்பிடிப்பு தொடங்கும் முன்பே டிஜிட்டல் ரிலீஸ்க்கு ரூ.50 கோடிக்கு வியாபாரமாகிவிட்டதா சூர்யாவின் படம்...?

‘ஜல்லிக்கட்டு’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் வாடிவாசல்...

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே டிஜிட்டல் ரிலீஸ்க்கு  ரூ.50 கோடிக்கு வியாபாரமாகிவிட்டதா சூர்யாவின்  படம்...?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டிஜிட்டல் தளமான ஓ.டி.டியில் வெளியான இப்படம் நல்ல வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும்  ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படம் சி.எஸ்.செல்லப்பா எழுதிய ‘ஜல்லிக்கட்டு’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த ஆண்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானதையடுத்து படத்திற்கு ’வாடிவாசல்’ என்ற பெயர் வைத்திருந்ததால் படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் திரையரங்கு ரிலீசுக்கு பின்னர் வெளியாகும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ரூபாய் 50 கோடிக்கு முன்னணி ஓடிடி நிறுவனமொன்று பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.