தூக்கமின்றி கொடுத்த எனது உழைப்புக்குக் கிடைத்த ஊதியமா இது?- கவலையை வெளிப்படுத்திய தெருக்குரல் அறிவு!!

ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில், தனக்கு நடந்த அநீதி குறித்து, பிரபல இசை கலைஞர் தெருக்குரல் அறிவு, தனது மன வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூக்கமின்றி கொடுத்த எனது உழைப்புக்குக் கிடைத்த ஊதியமா இது?- கவலையை வெளிப்படுத்திய தெருக்குரல் அறிவு!!

2022ம் ஆண்டின் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி, வருகிற ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. சென்னை மாமல்லபுரத்தில் ஒரு தனியார் விடுதியில் நடந்து வரும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்று வந்தது. சென்னை ஜவகர்லால் நேரு அரங்கில், பலதரப்பட்டவர்களுடன், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கோலாகலமாக இந்த விழா நடந்தது. அதில், பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இது குறித்து படிக்க | கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா..

Image

அதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், ஐஸ்வரியா ரஜினிகாந்த், கார்த்தி, விக்னேஷ் சிவன் என, விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. அதில், மிகவும் சிறப்பாக அமைந்ததே, பாடகி ‘தீ’ யின் சிறப்பு நிகழ்ச்சிதான்.

பிரபல இசைக்கலைஞனர் தெருக்குரல் பல கிராமிய வாடை வீடும் பாடல்களை இயக்கி இருக்கிரார். தானே இசையமைத்து, எழுதி, பாடியும் இருக்கும் பல பாடல்களின் மூலம் சந்தோஷ் நாராயணனின் பார்வைக்கு எட்டினார் அறிவு. அவரது திறனை வெளிப்படுத்தும் வகையில், எஞ்சாயி எஞ்சாமி பாடல் அமைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில், ஜூலை 28ம் தேதி, சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடின் துவக்க விழாவில் சந்தோஷ் நாராயணன் மகளான தீ- மட்டுமே பங்கேற்றார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏன் என்றால், இந்த பாடலின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது அறிவுதான். ஆனால், அவரே அங்கு இல்லை. ஆனால், இது முதல் முறையல்ல பல முறை இந்த பாடலுக்கான ப்ரொமோஷன்களில் அறிவு வைத்து அதிகமாக ப்ரொமோஷன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வருவதாகக் கருதிய அறிவு, தனது ஆதங்கத்தை, சமூக வலைத்தளங்களுக்குக் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து, தனது இன்ஸ்டாகிராமில், இந்த பாடலை, முழுமையாக எழுதி, இசையமைத்து பாடிய நான், யாருடைய உதவியும் எதிர்பார்த்து நிற்கவில்லை எனத் துவங்கி தன் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்.

Image

அறிவு வெளியிட்ட பதிவு:

இந்த பாடலை, முழுமையாக எழுதி, இசையமைத்து பாடிய நான்,

யாரும் எனக்கு இந்த பாடலை எழுத ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை.. இப்போது இருக்கும் அனைத்திற்கும் சுமார் 6 மாதங்களாக தூக்கமில்லாமல், மன அழுத்தத்தோடு உழைத்தேன்.. இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை.. இது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால் இது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இது போல இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.

இப்பாடல்கள் அனைத்தும் முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இவை அனைத்தும் அழகான பாடல்கள் வழியே உங்களிடம் தற்போது பேசப்படுகிறது.

ஏனென்றால் நாங்கள் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அபகரிக்கமுடியாது.. ஜெய்பீம். முடிவில் உண்மை எப்போதும் வெல்லும் என அறிவு வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது அனைவர் மத்தியில் பேசுபொருளாக ஆகிவிட்டது.