'அரபிக்குத்து' பாடலால் எழுந்த சர்ச்சை!! விஜய் அணிந்திருப்பது சிலுவையா? நங்கூரமா?

'அரபிக்குத்து' பாடலால் எழுந்த சர்ச்சை!! விஜய் அணிந்திருப்பது சிலுவையா? நங்கூரமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் தற்ஓது இயக்குனர் நெல்சனுடன் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘பீஸ்ட்’. மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தபடத்தின்  ‘அரபிக்குத்து’  பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ’அரபிக்குத்து’ பாடலில் விஜய் கழுத்தில் அணிந்திருப்பது சிலுவையா? நங்கூரமா? என்று கேள்வி எழுப்பி இரு பிரிவினராக பிரிந்து விவாதம் செய்து வருவது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து இந்து மக்கள் கட்சியினர் தனது  டுவிட்டர் பக்கத்தில், ‘அரபிக்குத்து’ பாடலில் விஜய் தனது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்பதாக பதிவு செய்துள்ளனர்.  அதே நேரத்தில் விஜய் சிலுவை அணிந்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் அவர் தன்னுடைய மத அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்துவதில் தவறில்லை  என்றும், இதனை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும், அதனால் தேவையற்ற பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவை பார்த்த இணையதள வாசிகள் சிலர் அதற்கு பதிலடி தரும் வகையில், அது சிலுவை அல்ல நங்கூரம் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.  ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இன்னேரு பிரிவினர், அது சிலுவை தான் என்றும், நங்கூர வடிவில் உள்ள சிலுவை என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையில் சிலுவையா? அல்லது நங்கூரமா? அல்லது இரண்டும் இல்லாத வேறு வகையா? அல்லது இது படத்தில் விஜய் கேரக்டருக்கு தொடர்புடையதா? என்பதை படக்குழுவினர்தான் விளக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த விவாதத்திற்கு நடுநிலையாக இருக்கும் ரசிகர்கள் சிலர், விஜய் அணிந்திருப்பது எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் மத அடையாளத்தை கண்டிப்பாக வெளிப்படுத்தும் வகையில் இருக்காது என்றும் விஜய் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும், தற்செயலாக நிகழ்ந்த ஒன்றை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும்  தெரிவித்து வருகின்றனர். 

இப்படி இணையத்தையே சூடேற்றி வரும் சிலுவையா? அல்லது நங்கூரமா? என்ற விவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைப்பார்களா? பீஸ்ட் படக்குழுவினர் பொறுத்திருந்து பார்ப்போம்.