இன்ஸ்டாகிராம் குயின் + காமெடி ஜாம்பவான்.. 'Combo'-வால் அனல் பறக்க போகுது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!!

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற தகவலை அந்த நடிகையாக தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் குயின் + காமெடி ஜாம்பவான்.. 'Combo'-வால் அனல் பறக்க போகுது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!!

நகைச்சுவையால் அனைவரையும் பெரும் அளவில் ஈர்த்து தன் கைவசம் வைத்திருப்பவர் தான் வடிவேலு. தற்போது லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப்போவது என பல தகவல்கள வெளியான. 

அதன்படி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடி இல்லை எனவும், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என பேச்சுக்கள் கிளம்பின.  வெளிநாட்டு நடிகை ஒருவரை நடிக்க வைக்கப்போவதாக பேச்சு வார்த்தை நடப்பதாக கூட தகவல் வெளியாகின. ஆனால், அது எல்லாமே வதந்தி ஆகிவிட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனங்களை கவர்ந்து, இன்ஸ்டாக்ரான் இளவரசியாக இருக்கும் ஷிவானி நாராயணன் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இதனை கண்ட அவரின் ரசிகர்கள், எங்க தலைவனோட நடிக்க கொடுத்து வச்சிருக்கணும் என்றும் கலக்குங்க ஷிவானி என்று ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்து வருகின்றன.