777 சார்லி படத்தால் ஈர்க்கப்பட்டு மோப்பநாய்க்கு சார்லி என பெயர்!

777 சார்லி படத்தால் ஈர்க்கப்பட்டு மோப்பநாய்க்கு சார்லி என பெயர்!

ட்ரிபிள் 7 சார்லி என்ற படத்தால் ஈர்க்கப்பட்டு கர்நாடகாவின் மங்களூருவில் ஒரு போலீஸ் மோப்பநாய்க்கு சார்லி என போலீசார் பெயர் வைத்துள்ளனர்.

கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷத் ஷெட்டி நடிப்பில் வெளியான ட்ரிபிள் 7 சார்லி என்ற படம் மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள உறவை உருக்கமாக முன்வைத்திருந்தது.

இதனால் ஈர்க்கப்பட்டு மங்களூருவில் 3 மாத லாப்ரடோர் ரெட்ரீவர் நாய்க்கு சார்லி என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிபொருட்களைக் கண்டறிய சார்லிக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும் என மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.