புலி வேடத்தில் ஆக்ரோஷமான லுக்கில் இந்திரஜா.. வைரல்  போட்டோஷூட்

இந்திரஜா குடியரசு தின ஸ்பெஷலாக புலி போன்ற மேக்கப் போட்டுகொண்டு போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்

புலி வேடத்தில் ஆக்ரோஷமான லுக்கில் இந்திரஜா.. வைரல்  போட்டோஷூட்

அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் இந்திரஜா ரோபோ ஷங்கர்.

அதற்கு முன்பே அவர் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு இணையத்தில் பிரபலமாகத்தான் இருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் ரீல்ஸ் செய்துகொண்டிருந்த அதன் பின்னர் தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சர்வைவர் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இந்திரஜா குடியரசு தின ஸ்பெஷலாக புலி போன்ற மேக்கப் போட்டுகொண்டு போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். 
இந்த வித்தியாசமான போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்களால் இணையத்தில் ஷேர் செய்யப்படுகிறது.