அப்படிப்போடு ஒரே கல்லுல 2 மாங்காவா... உங்கள இப்படி பாப்போம்னு நாங்க நினைச்சு கூட பாக்கலையே நமீதா..!

கிருஷ்ணர் கோவிலில் குழந்தைகளோடு சாமி தரிசனம் செய்த நமீதா..!

அப்படிப்போடு ஒரே கல்லுல 2 மாங்காவா... உங்கள இப்படி பாப்போம்னு நாங்க நினைச்சு கூட பாக்கலையே நமீதா..!

கவர்ச்சி நாயகி நமீதா: கவர்ச்சி நாயகியாக ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை நமீதா. வழக்கமான ஹீரோயின்களை தாண்டிய உயரம், கட்டுகோப்பான உடற்கட்டுடன், அழகு பதுமையாக 2004-ம் ஆண்டு விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நமீதா

இளைஞர்களின் கனவு கன்னி: தொடர்ந்து பல படங்களில் முன்னணி நாயகியாகவும், அவ்வப்போது கதாபாத்திர ரோல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர். பெரும்பாலும் இவர் கவர்ச்சி வேடங்களையே ஏற்று நடிப்பதால், இளசுகள் மத்தியில் நமீதா என்றாலே தனி மவுசு தான். 

மச்சான் என அழைக்கும் நமீதா: விஜய், அஜித், என முன்னணி ஹீரோக்களின் படங்களில் வலம் வந்தவர், பின்னாளில் பட வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் நடன போட்டி நடுவராக இருந்து வந்தார். படங்களில் நடித்ததை காட்டிலும், இந்த நடன போட்டி மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுப்படுத்தினார் நமீதா. அதிலும் இவர் இளசுகளை மச்சான் என்று அழைக்கும் அழகு இருக்கே..

நமீதாவின் மறுவுருவம்: அதனை தொடர்ந்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவர் அவ்வப்போது பிரசாரங்களிலும் தலைக் காட்டினார். அதன் பின்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் அவரது உண்மையான முகத்தை வெளிப்படுத்தினார் நமீதா. பெரும்பாலும் ஒரு கவர்ச்சி நடிகை என்றாலே நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பார்கள், இப்படி இருப்பார்கள் என நாம் கட்டி வைத்த மாயைகளை புல்டவுசர் வைத்து இடித்தவர் நமீதா. 

திருமணம்: ரியாலிட்டி ஷோவை முடித்த கையோடு 2017-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திரன் என்பவரை திருப்பதில் வைத்து மணம் முடித்தார். அதன் பிறகு சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டவர், ஃபுல் டைம் குடும்பத்தலைவியாகவே மாறி போனார். 

பேபி பம்ப் புகைப்படங்கள்: சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்த நமீதாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பும் நடைபெற்றது. அதன் பின் தனது பேபி பம்ப் தெரிய சில பல போட்டோ ஷூட்களையும் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பறக்கவிட்டார் நமீதா. 

ஒரே கல்லில் இரண்டு மாங்கா: இந்த நிலையில், கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு தனது இரட்டை குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் நடிகை நமீதா. நமீதாவும், அவரது கணவரும் ஆளுக்கொரு குழந்தையை கையில் ஏந்தியப்படி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்தனர். இந்த வீடியோவை தனது சோஷியல் மீடியாவில் நடிகை நமீதா பகிர்ந்துள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.