விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பூஜை! நேருக்கு நேர் மோதும் - “விருமன் மற்றும் எஸ்.கே.20”

கார்த்தி, சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் ஒரேநாளில் வெளியாக இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பூஜை! நேருக்கு நேர் மோதும் - “விருமன் மற்றும் எஸ்.கே.20”

கொம்பன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் விருமன். இப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது படமும் அதே தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நடிகர்களும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், அந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.